விஜயகுமார்

விஜயகுமார்
Published on: 

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்குச் சென்று புகைப்படங்களில் பதிவு செய்து வருகிறார் சேலத்தைச் சேர்ந்த விஜயகுமார். ‘‘பொதுவாக வனம், விலங்குகள் ஆகியவை குறித்த படங்களை எடுப்பதே என் தனிப்பட்ட மன திருப்திக்காக நான் விரும்பிச் செய்வது. ஜல்லிக்கட்டு படங்கள் அதன் நீட்சியே'' என்று சொல்லும் விஜயகுமார் விகடன் குழுமத்தின் சார்பில் சேலம் மாவட்ட புகைப்படக் காரராகவும் பணிபுரிகிறார். ஜல்லிக்கட்டு தொடர்பான தன் படங்களைச் சேர்த்து புகைப்பட கண்காட்சி நடத்தவேண்டும் என்பது இவரது எதிர்காலத் திட்டம்.

ஜனவரி, 2015.